Posts

வாழ்வின் வசந்தம்

வாழ்க்கையின் பொருள் தான் என்ன வாழ்ந்து தான் பார்த்தால் என்ன... வாழ்க்கை ஒரு மனிதனின் உன்னதமான உணர்வுகளை வேண்டும் பொழுது தட்டி எழுப்பி அதனுள் அதுவாகவே ஒருவனின் சுயத்தை உடுத்தி அவனை வேறு ஒரு தளத்தில் பயணிக்க செய்து அதை அவன் அறியாமலே மாற்றி அவனுள் அவனாகவே இருந்த அனைத்தையும் புரட்டி போட்டு மறுபடியும் அதன் சுழற்சியை செவ்வனே தொடங்குகிறது. நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான் நாமெல்லாம் பொம்மை என நாடகம் காட்டுகின்றான் காவியம் போல ஒரு காதலை சொல்கிறான் காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுகின்றான். இந்த பாடல் வரிகள் மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை ஆண்டவன் கையாளும் விதத்தை நமக்கு புகட்டுகிறது. ஆயினும் மனித மனதின் பரிணாம வளரச்சி இந்த உன்னத உண்மையை புரிந்து கொள்ள அல்லது கடந்து செல்ல கஷ்டப்படுகிறது. ரயில் ஸ்நேகமாய் புயல் அடித்த மேகமாய் அனைவரின் வாழ்விலும் இந்த உண்மை இன்றியமையாத ஒரு உண்மையாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதே சமயத்தில் காலம் எனும் சக்தி இந்த உண்மையை சில பல நேரங்களில் மனிதன் கடந்து செல்ல ஒரு ஆற்று பாலமாய் அமைகிறது. நமது கடந்த கால நினைவுகள், இழந்த வாய்ப்ப...