வாழ்வின் வசந்தம்
வாழ்க்கையின் பொருள் தான் என்ன வாழ்ந்து தான் பார்த்தால் என்ன...
வாழ்க்கை ஒரு மனிதனின் உன்னதமான உணர்வுகளை வேண்டும் பொழுது தட்டி எழுப்பி அதனுள் அதுவாகவே ஒருவனின் சுயத்தை உடுத்தி அவனை வேறு ஒரு தளத்தில் பயணிக்க செய்து அதை அவன் அறியாமலே மாற்றி அவனுள் அவனாகவே இருந்த அனைத்தையும் புரட்டி போட்டு மறுபடியும் அதன் சுழற்சியை செவ்வனே தொடங்குகிறது.
நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மை என நாடகம் காட்டுகின்றான்
காவியம் போல ஒரு காதலை சொல்கிறான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுகின்றான்.
இந்த பாடல் வரிகள் மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை ஆண்டவன் கையாளும் விதத்தை நமக்கு புகட்டுகிறது. ஆயினும் மனித மனதின் பரிணாம வளரச்சி இந்த உன்னத உண்மையை புரிந்து கொள்ள அல்லது கடந்து செல்ல கஷ்டப்படுகிறது. ரயில் ஸ்நேகமாய் புயல் அடித்த மேகமாய் அனைவரின் வாழ்விலும் இந்த உண்மை இன்றியமையாத ஒரு உண்மையாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதே சமயத்தில் காலம் எனும் சக்தி இந்த உண்மையை சில பல நேரங்களில் மனிதன் கடந்து செல்ல ஒரு ஆற்று பாலமாய் அமைகிறது. நமது கடந்த கால நினைவுகள், இழந்த வாய்ப்புகள், அடைந்த தோல்விகள் மற்றும் அவமானகள் இவை அனைத்தையும் எதிர் கொள்ளும் திறமையை நமக்கு இந்த காலமும், வாழ்க்கையின் தொடர் சுழற்சியும் ஈடு கட்டி கொண்டு தான் இருக்கிறது. இதை உணர்ந்தவர்கள் ஞானி ஆகிறார்கள் சிலர் இதை நினைத்து ஆற்று போகிறார்கள். ஆனால் காலமும் நேரமும் அதன் வேலையை தொடர்ந்து கொண்டே தானிருக்கிறது. புரட்டி போடப்பட்ட வாழ்க்கையின் வலிகளை காலம் தனது நிதானத்தால் வருடி விட்டு ஆற்றுகிறது . சில பல வலிகள் மறைந்தாலும் அதன் வடுக்கள் மனதின் ஓரத்தில் ஒரு ஏக்கமாய் ஒரு தாக்கமாய் எல்ல மனிதர்களிடத்திலும் மறைந்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதை தான் சுகமான சுமைகள் என்று கூறுகிறார்கள் போலும்.
ஆதார ஸ்ருதியான அன்னையில் இருந்து இந்த வாழ்க்கை ஒருவனின் நீண்ட நெடிய பயணத்தை துவக்கி தந்தை குடும்பம் மற்றும் சுற்றம் என்ற லயங்களின் இணைப்பில் ஒரு இசை தட்டாக சுழல ஆரம்பம் ஆகிறது.
இந்த இசை பயணத்தை ஒருவனின் வாழ்வில் இருந்து அவன் கோணத்தில் அவன் சார்ந்த கேள்விகளின் நிலையில் மற்றும் அன்றைய அவனின் முடிவு எடுக்கும் திறமைகள் மூலம் நோக்கினால் சில பல மனதில் புதைந்த அல்லது காலத்தால் மறுதலிக்க பெற்ற பல சுவாரஸ்யங்களை நம்மால் கண்டெடுக்க முடியும். அதன் ஆதாரமும் அதன் சார்ந்த சம்பவங்களும் ஒரு மனதினை எந்த அளவு பக்குவப்படுத்த முயலும் என்பது அவரவர்களின் அந்நேரத்து வாழ்க்கை சுழற்சியின் பங்களிப்பை பொருத்தது. இந்த அனுபவங்களின் மூலம் இதற்கெல்லாம் மேலாக நம்மை எல்லாம் வழி நடத்தும் ஆண்டவன் சொல்படி நல்ல ஆன்மாவாக முயற்சிப்போமானால் என்றும் ஜெயமே.
நம் அனைவரிலும் புதைந்து கிடக்கும் ஆரம்ப கால வசந்தம், காதல், கண்ணீர், வெற்றி, தோல்வி, முயற்சி, துரோகம், மேலாண்மை, நட்பு, வேலை, செயல், என்ற பல பரிணாமங்களை, பல் வேறு கோணங்களை, பல் வேறு திருப்பு முனைகளை திரும்பி பார்த்து நமது வாழ்வின் ஒவ்வொரு சுழற்சியின் போது நாம் எதுவாக மாற்றப்பட்டோம் என்ற சுய பரிசோதனை செய்வதன் மூலம் நம்மால், நமது அனுபவங்களால் வரப்போகும் சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க முடியும்.
The collective action and the results of the same with the deep learning on the various facets of life which happened in the past is a a huge data source for the future generation to improve the quality of life.
Self diagnosis is the first step to understand the path of Self-Realization
Comments
Post a Comment